/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, November 05, 2006

அ, ஆ...கவிதை - 11 (காதல்)

அன்பென்று சொல்வதா
ஆசையென்று கொள்வதா
இன்பம் தரவல்லதா
ஈடில்லாதது என்பதா
உயிரில் கலந்ததா
ஊக்கம் தருவதா
எல்லோருக்கும் வருவதா
ஏய்த்து அழிப்பதா
ஏங்கச் செய்வதா
ஐயம்கொள்ள வைப்பதா
ஒன்றாய் இணைப்பதா
ஓவியம் போன்றதா
ஔசித்தியம் பார்ப்பதா
இஃதே காதலுணர்வா.

ஃஃஃ

Friday, November 03, 2006

அ, ஆ...கவிதை - 10 (வாரிசு)

அன்பு மகன் ஆதித்யா
ஆசை மகள் ஐஸ்வர்யா
இருவரும் எங்களின் உயிரோட்டம்
ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்
உயிராய் அன்பைப் பொழிகின்றார்
ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்
எங்களின் எண்ணம் புரிந்திடுவர்
ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்
ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்
ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்
ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்
ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்
அஃரிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர்.
ஃஃஃ

அ, ஆ...கவிதை - 9 (மக்கட்பேறு)

அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்
ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்
இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்
ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்
உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்
ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்
எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்
ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்
ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்
ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்
ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்
ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்
இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.
ஃஃஃ