அ, ஆ...கவிதை - 10 (வாரிசு)
அன்பு மகன் ஆதித்யா
ஆசை மகள் ஐஸ்வர்யா
இருவரும் எங்களின் உயிரோட்டம்
ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்
உயிராய் அன்பைப் பொழிகின்றார்
ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்
எங்களின் எண்ணம் புரிந்திடுவர்
ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்
ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்
ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்
ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்
ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்
அஃரிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர்.
ஃஃஃ



2 Comments:
அருமையா இருக்கு கலை அரசன்..
இப்பதான் எல்லா அ.. ஆ.. வும் படிச்சேன்..நல்லா வந்து இருக்கு
மங்கை
வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி மங்கை.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home