/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, September 04, 2006

சின்னக் குழந்தாய்...

சின்னக் குழந்தாய் சின்னக் குழந்தாய்
ஒரு சொல் கேட்டிடம்மா
கதிரவன் எழும் முன்னே – தினம்
நீ காலையில் எழுந்திடம்மா
புரத்தூய்மை பேண நன்றாய் நீயும்
குளிர் நீரில் குளித்திடம்மா
அகத்தூய்மை பேண அனுதினமும்
இறைவனை மனதில் நினைத்திடம்மா.


நொடிப் பொழுதும் தாமதமின்றி – தினம்
பள்ளி சென்று சேர்ந்திடவேண்டும்
நல்ல நண்பர் குழாம் உனைச்சுற்றி
பள்ளியில் நீ அமைத்திட வேண்டும்.
கற்றுத்தரும் ஆசானை ஆண்டவன் போல்
நாளும் மனதில் நினைத்திடவேண்டும்.
கற்ற கல்வி வழிநின்று – தினம்
நி வாழ்வில் உயர்ந்திடவேண்டும்.


வளர்ந்து வரும் உலகில் சிறந்திட
கணினியைக் கற்று தேர்ந்திடவேண்டும்
உலகத்தின் நடப்பை எல்லாம் – நீ
வலைத்தளத்தில் அறிந்திட வேண்டும்
எவ்வுயரம் வளர்ந்திட்ட போதும் – நீ
பழமையை போற்றி பேணிடவேண்டும்
அன்னை தந்தை ஆசான் பேணி
தாய் மொழியை வளர்த்திடவேண்டும்.
******

4 Comments:

At 4/9/06 3:39 pm, Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல கருத்துக்கள். குழந்தைகளுக்கான பாடலில் ராகம், எதுகை/மோனை, வார்த்தைத் தெளிவு போன்றவற்றைச் செம்மை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

 
At 4/9/06 5:45 pm, Blogger ENNAR said...

கலை அரசன்
தங்கள் குழந்தைக்கான கவிதையா?

 
At 5/9/06 7:07 am, Blogger மா.கலை அரசன் said...

//தங்கள் குழந்தைக்கான கவிதையா?// அப்படிக் கூட சொல்லலாம் Ennar Sir. ஆனால் பொதுவாக எழுதியது தான்.

 
At 5/9/06 7:10 am, Blogger மா.கலை அரசன் said...

//நல்ல கருத்துக்கள். குழந்தைகளுக்கான பாடலில் ராகம், எதுகை/மோனை, வார்த்தைத் தெளிவு போன்றவற்றைச் செம்மை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//-
உங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சுந்தரவடிவேல் சார்.

 

Post a Comment

<< Home