/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, August 23, 2006

ஆறுதல்.

சுட்டெரிக்கும் வெயில் நாளில்
குடையாய் விரிந்திரிக்கும்
ஆலமர நிழல் ஆறுதல்.

கோடை வெயிலுக்கு இதமாய்
மெல்லத் தூறும்
சிறு தூறல் ஆறுதல்.

கொட்டும் மழை நேரத்தில்
ஒதுங்க இடம் கொடுக்கும்
குடைக்காரர் செயல் ஆறுதல்.

அடிவயிற்றைப் பிசையும் பசி நேரத்தில்
தள்ளுவண்டிக்காரர் விற்கும்
மண்பானை கம்பங்கூள் ஆறுதல்.

பிரச்சனையான தருணத்தில் நமக்காக
அறிமுகமில்லாத அன்னியர் பரிந்து பேசும்
வார்த்தைகள் ஆறுதல்.

வாகன விபத்தில் ரோட்டோரம்
வீழும் நம்மை தூக்கிவிட
நீழும் கைகள் ஆறுதல்.

துயரத்தில் வாடும் போது
மீண்டுவர துணைபுரியும்
நண்பர் குழாம் ஆறுதல்.

ஓய்ந்து சாயும் நேரம்
அப்பா என்றழைத்து குழந்தை செய்யும்
சிறு குறும்பு ஆறுதல்.

துன்பத்தில் துவண்டு போகையில்
தோளோடு தோள் நிற்கும்
சகோதர சகோதரிகள் உறவு ஆறுதல்.

தன்னலன் துறந்து கணவன் நலன்
பேணி நிற்கும்
மனைவி முகம் ஆறுதல்.

மனைவி மக்கள் சுகம் காக்க
தடைகளை தகர்த்தெரியும்
குடும்பத்தலைவன் துணிவு ஆறுதல்.

வீழ்வதெல்லாம் எழுவதற்கே என்று சொல்லி
தூணாய் தாங்கி நிற்கும்
தந்தை எப்போதும் ஆறுதல்.

இன்பத்திலும் துன்பத்திலும் இழைப்பார
நமக்காய் காத்திருக்கும் அன்னை மடி
எக்காலத்திலும் மானிடருக்கு ஆறுதல்.

2 Comments:

At 26/8/06 5:56 am, Blogger ENNAR said...

நல் கவிதை

"கொண்டு வந்தால் தந்தை; கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்"

 
At 26/8/06 9:29 pm, Blogger மா.கலை அரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Ennar Sir. அடிக்கடி வந்து உங்கள் எண்ணத்தைக்கூறவும்.

 

Post a Comment

<< Home