/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, July 23, 2006

ஹைகூ-கதம்பம்.

வரவிற்காய் ஏங்குகின்றார்
வந்தால் ஏசுகின்றார்
சோகத்தில் மழை.

வளர்ந்தால் நிழல்
மடிந்தால் விறகு
மரம்.

ஓடிக்கொண்டே இருக்கின்றான்
கழைப்பறிய மாட்டானோ?
கடிகாரம்.

ஆற்றுவிக்கப்பட்ட பின்னும்
பீனிக்ஸாய் வருவதேன்?
பசி.

நகரும் உயிர்ச்சக்கரம்
தகர்க்கும் ஒற்றன்
மரணம்.

சமுதாயச் சந்தையில்
அவனுக்கும் அவளுக்குமான பண்டமாற்று
திருமணம்.

இன்று வீழ்ந்தால்
நாளை எழுவான்
சூரியன்.

எழுவதற்காகவே
வீழ்கின்றதோ?!...
அலை.

கரையேரத்துடித்த அலையின்
ஆவேச முயற்சியோ?!...
சுனாமி.

6 Comments:

At 23/8/06 1:27 pm, Blogger கார்த்திக் பிரபு said...

nalla hikoos..thodarungal

 
At 24/8/06 9:16 am, Blogger மா.கலை அரசன் said...

வரவிற்கும் உங்கள் ஊக்குவிப்புற்கும் நன்றி கார்த்திக் சார்.

 
At 29/8/06 7:59 pm, Blogger ENNAR said...

கவி அரசன் ஓ கலை அரசன்,
மழை,மரம்,கடிகாரம்,பசி,மரணம்,திருமணம், சூரியன், அலை அத்துணையும் அடங்கிவிட்டது உங்கள் கவியில் நற்கவி வழங்கிய நண்பருக்கு வாழ்த்துகள்.

 
At 29/8/06 9:41 pm, Blogger மா.கலை அரசன் said...

நன்றி Ennar Sir.

 
At 9/9/06 12:28 am, Blogger சத்தியா said...

கதம்பத்தை நானும் சுவைத்தேன். நன்று.

 
At 9/9/06 10:22 pm, Blogger மா.கலை அரசன் said...

//கதம்பத்தை நானும் சுவைத்தேன். நன்று// -
அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துட்டுப்போங்க.

 

Post a Comment

<< Home