/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Saturday, July 08, 2006

ஆசை

நீ
மரமாய் இருந்தால்
காற்றாய்
உனை தழுவ ஆசை.

நீ
கடலாய் இருந்தால்
மீனாய்
உன்னில் நீந்த ஆசை.


நீ
இரவு வானமானால்
விண்மீனாய்
உன் தேகம் தழுவி கண்சிமிட்ட ஆசை.

நீ
பூமியாய் இருந்தால்
மழைத்துளியாய்
உன் மடியில் புரள ஆசை.

உயிரே!...
நீ
பெண்ணாக இருப்பதால்
கேட்கின்றேன்,
உன் வாழ்க்கைத்துணையாய்
வரலாமா?

-----------------------------------------------------------------------------------------------
13.08.2003 ல் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி என்னும் ஊரில் வைத்து எழுதியது.
-----------------------------------------------------------------------------------------------

8 Comments:

At 8/7/06 10:15 pm, Blogger கோவி.கண்ணன் said...

நீர், நிலம், ஆகயம், காற்று எல்லாம் சொல்லிவிட்டு பஞ்சபூதங்களில் நெருப்பை விட்டுவிட்டீர்கள்.

நீ
நெருப்பாக இருந்தால்
சருகாக உன்னுடன்
சேர்ந்து கருக ஆசைப்படுகிறேன்

என்று சொல்லியிருக்கலாம்.

உங்களுக்கு கவிதை நன்றாகவே வருகிறது

 
At 8/7/06 11:26 pm, Blogger மா.கலை அரசன் said...

மண்ணிக்கனும் கண்ணன் சார். இந்த கவிதை நான் இப்போது எழுதியது அல்ல 13.08.2003 ல் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி என்னும் ஊரில் வேலை பார்த்த போது வேலையின் நடுவே கிடைத்த சிறு இடைவெளியில் எழுதியது. அப்போது பஞ்ச பூதங்கள் பற்றிய எண்ணம் வர வில்லை. நீங்கள் சொல்வது போல் நெருப்பையும் சேர்த்திருந்தால் நன்றாகவெ இருக்கும்.

 
At 11/7/06 8:33 pm, Blogger aaradhana said...

கொஞ்சம் காவேரி பக்கமும் வாங்க சார்.

 
At 11/7/06 8:36 pm, Blogger Unknown said...

your kavithai is very good to read

 
At 11/7/06 10:06 pm, Blogger மா.கலை அரசன் said...

//கொஞ்சம் காவேரி பக்கமும் வாங்க சார்//
நானும் காவேரி கரைல தான் இருக்கேன் மேடம்.

 
At 11/7/06 10:42 pm, Blogger மா.கலை அரசன் said...

//your kavithai is very good to read//
உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

 
At 9/9/06 12:31 am, Blogger சத்தியா said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை.

 
At 9/9/06 10:26 pm, Blogger மா.கலை அரசன் said...

//ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை. //
ஆசை யாரத்தான் விட்டது மேடம்.

 

Post a Comment

<< Home