/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Tuesday, July 11, 2006

பேய்களின் வெறியாட்டம்.

என்ன சொல்வேன்?
என்ன செய்வேன-என்
நெஞ்சே
என்ன செய்வேன்?.

எத்தனை சிதைவு
எத்தனை அழிவு
சிதறித்தெரித்த இரத்தச் சிதரலில்
எத்தனை சகோதரிகளின்
நெற்றிப் பொட்டுக்கள்.

இரத்த வெறிபிடித்த
ஓநாய்களின் குதறலில்-சிதைந்தது
எத்தனை மலர்கள்.

சிதைந்த உடல்கள்
சிந்தி உரைந்த இரத்தத்துளிகள்
சிதறுண்ட எலும்புகள்.

ஏ ஓநாய்களே!
தணிந்ததா உங்களின் தாகம்.
உம்மை ஈன்றவள்
தாயா?! பேயா?!
உமக்கு
முலைப்பாலூட்டினாளா?!
கொலைவெறியூ்டினாளா?!

பதினொரு மணித்துளிக்குள்
பலநூறு உயிர் குடித்த
உன் வெறியாட்டம் எப்போதடங்கும்.

மதங்கள் உதித்தது
மனங்களை மலர்விக்க
யாருனக்கு கற்றுத்தந்தது
உயிர்களை உதிர்விக்க.

சாத்தான்களே!
இரத்த வெறிபிடித்த ஓநாய்களே!!
சங்கொலி கேட்கின்றது.
இது
மரித்துப் போன-என்
சகோதர சகோதரிகளுக்காக எழுப்பப்படும்
இறுதி அஞ்சலி மட்டுமல்ல.
உங்களின்
வேரறுக்க எழுப்பும்-முதல்
எச்சரிக்கை.

4 Comments:

At 12/7/06 2:54 am, Blogger murali said...

நண்பரே நியாமான உணர்வு.ஆனால் நமது எதிரி இதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல.
நமது ஜனங்களுக்கு சூடு சொரன கிடையாது.இத்தாலிகாரிய கூட பிரதமரா ஏற்க தயாரா இருந்த மக்களுக்கு எவன் பயப்படுவான் / மரியாதை குடுப்பான்.

நமது ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு எந்த கவலையும் கிடையாது.அவனுக்கு பின்னாடி எவனும் கத்தி எடுத்துட்டு வந்தா கூட அவனுக்கு இஸட் பிரிவு/ கமாண்டோ பாதுகாப்பு.
ஒவ் ஒரு முறையும் குறி வைத்து தாக்கப்படுவது இந்துக்களும், அவர்களின் வழிபாட்டு தளங்களும்தானே.

வேற எவனும் செத்திருந்தா இந்நேரம் முரசொலில இரங்கற்பா பாடியிருப்பானுங்கோ.

இந்த மாதிரி நேரங்களில் நாம கொஞ்சம் மூலையை கழட்டி வச்சுட்டு கோபத்தக் காட்டனும்.ஆனா நம்ம ஆளுங்க நூறு கோடில நூறு பேர் செத்தா என்னன்னுட்டு
அடுத்தபடியா எப்ப குண்டி சட்டில குதிர ஒட்டலாம்னு; பழச சுலபமா மறந்துர்றானுங்க.

நம்ம கண்டனுத்துக்குள்ளாம் எவன் பயப்புடுவான். நம்ம மேல எவனும் குண்டு போடாத வரைக்கும் சந்தோஷம்தான்.

வேற என்னத்த சொல்ல. அடுத்த குண்டு இனிமே டிசம்பர் ஆறு க்குதான்.அதுவரைக்கும் நல்ல ப்ளாக்கனா கதை, கவிதை,கட்டுரைனு காலத்த ஓட்ட வேண்டியதுதான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

 
At 12/7/06 7:13 am, Blogger மா.கலை அரசன் said...

நீங்கள் சொல்வது நியாயம் தான் நண்பரே,
இந்த பிணம் தின்னும் கழுகுகள் எதற்ரும் அஞ்சாத பாதகர்கள்.
இந்த பாதகர்களுக்கு உயிரின் அருமை புரியவில்லை.
நம் ஓட்டுப்பொட்டி ஓநாய்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
செக்குலரிசம் என்பதற்கு முழு அர்த்தம் புரியாமலேயே இந்த நாய்கள் நம்மை ஆண்டுகொண்டிருக்கும் வரை இந்த அவல நிலையை கட்டுப்படுத்துவது கடினம் தான்.
ஆற்றாமையில் நாம் அழுது புலம்ப வேண்டியதுதான்.
அன்புடன்
கலை அரசன்.

 
At 13/7/06 12:21 am, Blogger கதிர் said...

"உம்மை ஈன்றவள்
தாயா?! பேயா?!
உமக்கு
முலைப்பாலூட்டினாளா?!
கொலைவெறியூ்டினாளா?!"

எந்த தாயும் இப்படிபட்ட வெறிகளை ஊட்டி வளர்க்க மாட்டாள். சில இன வெறி பிடித்த, பதவி வெறி பிடித்த தலைவர்ளால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஓநாய்களின் கீழ்த்தரமான வேலைகள்.

இவர்களை பிடிக்கும் இடத்திலேயே தூக்கிலிடும் சட்டம் வரணும்

மூச்சு விடக்கூட அனுமதியாமல் கொல்ல வேண்டும்

ஆவேசமுடன்
தம்பி

 
At 16/7/06 9:45 pm, Blogger மா.கலை அரசன் said...

//இவர்களை பிடிக்கும் இடத்திலேயே தூக்கிலிடும் சட்டம் வரணும்

மூச்சு விடக்கூட அனுமதியாமல் கொல்ல வேண்டும்//

இவனுகள எங்க தூக்குல போடறது. அடிக்கக்கூட முடியாது. Human Rights Commission-னு சொல்லிக்கிட்டு கொடிபுடிச்சி கிட்டு வந்துடுவானுக.

 

Post a Comment

<< Home