/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, August 27, 2006

எங்கள் வீட்டு புதுமலர்.

அதிகாலைப் பொழுதின் ரம்மியம் நீ
வருடும் தொன்றலின் மென்மை நீ
வட்ட நிலவின் குளிர்ச்சி நீ
வெண்மல்லிகைப் பூவின் நறுமணம் நீ.

ரோஜா இதழாய்
உன் கை,
என் விரல் பற்றிடும் போது
மேகக்கூட்டத்தில் மிதக்கின்றேன்.

தாமரையாய்
உன் முகம் மலரும் போது
துன்பம் மறந்து
எல்லைகளற்ற
இன்ப வானில் பறக்கின்றேன்.

முகம் பார்த்து
நீ சிரிக்கும் போது
உலகத்து இசையனைத்தும்
தோற்கும் என்பேன்.

“நீ தவழும் போது
உன் அழகு பார்த்து
ஆண்டாள் கோவில் தேர்
வெட்கம் கொள்ளுமோ?...

நீ மழலைமொழி பேசும் போது
குற்றால அருவி கூட
வாய் பொத்தி நின்று
கொட்குமோ?...

உன் குழந்தை வயது குறும்பு
வெண்ணெய் திருடிய
கண்ணனையும் விஞ்சுமோ?...

வாலிப வயதில்
வஞ்சியர் கூட்டம்
வண்ணத்துப் பூச்சிகளாய்
உனைசுற்றிடுமோ?...

வலிமையில் நீ
காவிய காலத்து
காண்டீபனுக்கு நிகராய்
வருவயோ?

நாளைய பாரதமும்
நீ காட்டும்
நல்வழியைப் பின்பற்றி
வையத்துள்
வல்லரசாய் உயர்திடுமோ?
மனித நேயம் காத்து
சிறந்திடுமோ?”-

இப்போதே
கற்பனையில்
நீர் சுமந்த மேகமாய்
மிதக்கின்றேன்.

எங்கள் வீட்டில்
பூத்திட்ட புது மலரே
என் மருமானே…
உனை
தெய்வமாய் நிற்கின்ற
என் தந்தையின்
புது வடிவாய்ப் பார்க்கின்றேன்.

2 Comments:

At 31/8/06 4:17 am, Blogger சத்தியா said...

"எங்கள் வீட்டில்
பூத்திட்ட புது மலரே
என் மருமானே…
உனை
தெய்வமாய் நிற்கின்ற
என் தந்தையின்
புது வடிவாய்ப் பார்க்கின்றேன்."

புத்தம் புதிதாய்
பூத்திட்ட மலருக்கு
பூத்த கவிதை... நன்று!

 
At 31/8/06 10:24 pm, Blogger மா.கலை அரசன் said...

அடிக்கடி தங்களின் வருகையையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.

 

Post a Comment

<< Home