/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, August 30, 2006

ஹைகூ - ஆறு

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.



தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.


உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.



பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.



புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.



உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

2 Comments:

At 31/8/06 4:14 am, Blogger சத்தியா said...

"உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி"...

நல்ல ஹைகூ கவிதைகள். எனக்கும் ஹைக்கூ கவிதைகள் நன்கு பிடிக்கும்.
பாராட்டுக்கள்.

 
At 31/8/06 10:21 pm, Blogger மா.கலை அரசன் said...

சத்தியா மேடம் தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home