/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, September 11, 2006

மௌனம் வெறுக்கிறேன் !…

சுகந்த மணம் தவழ
மெல்ல
மொட்டவிழும்
மலரின் மௌனம் ரசிப்பேன்.

அலைகள் வீசி ஓய்ந்து
அயர்வாய்
அலைகளின்றி தூங்கும்
நீர்நிலையின் மௌனம் ரசிப்பேன்.

பள்ளி சென்று படித்து – பின்
விளையாடி ஓய்ந்து
என் மேல் கொடியாய்
கால்பரப்பி கண்ணயரும்
என் செல்ல மகளின்
மௌனமான தூக்கம் ரசிப்பேன்.

நீ
சில நேரம்
சிடு சிடுத்து சிணுங்கி – பின்
அமைதியாய்
என் கைகளுக்குள் அடைக்கலமாகும்
மௌன அழகை ரசிப்பேன்.

பகலுக்கு
கருமை பூசி
கண்மூடிக் கிடக்கும்
இரவின்
ஏகாந்த மௌனம் ரசிப்பேன்.

புயலின் அபாயமின்றி
பூப்போல
மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் கைற்றின்
மெல்லிய மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

அந்தரத்தில்
தொங்கி
அழகாய் ஜொலிஜொலிக்கும்
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.

மௌனம் ரசிக்கும் நானே
என்
மௌனம் வெறுக்கின்றேன்.

உன்னோடு
ஊடல் கொண்டு
நான் மௌனம் காக்கும்
சில மணித்துளிகளில்
நீ
மரணவேதனையை
அனுபவித்த கணங்களை
நான் ரசிக்கவா முடியும்?!...

என்
மௌனம் வெறுக்கின்றேன்
நீ
என்வோடு இருக்கும் போது
மட்டும்!...

4 Comments:

At 1/10/06 4:25 am, Blogger மு.குப்புசாமி said...

Kavithai migavum arumaiyaaga irunthathu. vaazhthukkal.

 
At 27/10/06 11:39 am, Blogger தாரிணி said...

மிக மிக அருமையான மென்மையான
கவிதை. வாழ்த்துக்கள்.

 
At 27/10/06 10:12 pm, Blogger மா.கலை அரசன் said...

//Kuppu said...
Kavithai migavum arumaiyaaga irunthathu. vaazhthukkal.// - வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Kuppu அவர்களே.

 
At 27/10/06 10:14 pm, Blogger மா.கலை அரசன் said...

//தாரிணி said...
மிக மிக அருமையான மென்மையான
கவிதை. வாழ்த்துக்கள். //

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தாரிணி.

 

Post a Comment

<< Home