/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, September 14, 2006

யார் நீ?...

சகியே!...
தென்றலாய் வந்து
இதமாய் கடந்து சென்றாய்.
புயலின் தாக்கத்தை
விட்டுச்செல்கின்றாய்.

வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
மெழுகாய்
ஒளி தந்து கடந்தாய்.
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து செல்கின்றாய்.

ஒற்றை
மலராகவே வந்தாய்
அழகிய
பூந்தோட்டமாய்
நறுமணம் கமழ்கின்றாய்.

எப்படி
என்னுள் நுழைந்தாய்?!...
நானே அறியாத
ஒரு கணத்தில்...

பகல் வானம் போல்
வெருமையாய் இருந்த என்னில்
இரவு வான்
நட்சத்திரங்களாய்
உன் நினைவை
விதைத்து விட்டாய்.

உன்
ஞாபக அலைகள்
சிறு தூறலாக துளிர்த்து
அருவியாய்
ஆர்ப்பரிக்கின்றது.

யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !...
ஃஃஃ

6 Comments:

At 14/9/06 2:21 am, Blogger சத்தியா said...

யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !..."

அட!... யாரப்பா அது? நம்ம கலை அரசனை கொல்லாமல் கொல்வது?

 
At 28/9/06 12:31 am, Blogger Moorthy S Venkatraman said...

வார்த்தைகளின் தன்மையைப் பார்த்தால், யாரோ கொல்வது போலத்தான் தெரிகிறது!!

//
யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !..."
//

இவ்வரிகளை அனுபவித்து எழுதியிருக்க வேண்டும், அற்புதம்!

 
At 19/10/06 8:30 am, Blogger சுஜா செல்லப்பன் said...

அருமையான வரிகள்...பாராட்டுக்கள்..

 
At 19/10/06 9:37 pm, Blogger மா.கலை அரசன் said...

//அருமையான வரிகள்...பாராட்டுக்கள்.. //

நன்றி சுடர் விழி.

 
At 19/10/06 9:38 pm, Blogger மா.கலை அரசன் said...

//யார் நீ?...
உன்னைச் சொல்லாமலேயே
என்னைக் கொல்கின்றாய் !..."

அட!... யாரப்பா அது? நம்ம கலை அரசனை கொல்லாமல் கொல்வது? // -

நன்றி சத்தியா.

 
At 19/10/06 9:39 pm, Blogger மா.கலை அரசன் said...

நன்றி மூர்த்தி.

 

Post a Comment

<< Home